தமிழகத்தில் நாளை முதல் தொடங்கும் ஜல்லிக்கட்டு… காளையை தயார்படுத்தும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ; வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan5 January 2024, 3:36 pm
தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆர்வலரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு வரும் ஆறாம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் பாலவேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
வாடி வாசலில் இருந்து களத்தில் இறக்க காளைகளை ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் தயாராக்கி வருகின்றனர். காளைகளுக்கு மண் குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர். இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு வரும் ஆறாம் தேதி தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்ட தச்சங்குறிச்சியில் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு ஆர்வலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், நான்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், தமிழகத்தின் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் ஆண்டுதோறும் பங்கு பெறுவது வழக்கம். விஜயபாஸ்கர் வளர்த்து வரும் காளைகள் களத்தில் நின்று வீரர்களை திணறடித்து வீரர்களிடம் சிக்காமல் பல்வேறு பரிசுகளை பெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தனது காளைகளுக்கு விஜயபாஸ்கர் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார். மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை விஜயபாஸ்கர் தனது காளைகளுக்கு வழங்கி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.