அவசரகால சிகிச்சை மையங்களுக்கு மூடுவிழா… கடுமையான போராட்டம் நடத்தப்படும் ; விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 8:37 pm

புதுக்கோட்டை ; தமிழகத்தில் விபத்து அதிகம் நடக்கக்கூடிய சென்னை புதுக்கோட்டை உள்ளிட்ட 11 தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவசர கால சிகிச்சை மையங்கள் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை மூடுவதற்கு தற்போது அரசு முடிவு எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்த பியூ சின்னப்பாவின் 106வது பிறந்தநாள் விழா இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட பியு சின்னப்பாவின் நினைவிடம் புதுக்கோட்டை சின்னப்பா நகரில் உள்ளது. இங்கு அவரது ரசிகர்கள் அவரது நினைவிடத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோன்று பியு சின்னப்பாவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜயபாஸ்கர் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தனி ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதிமுக சார்பில் பேசியுள்ளோம். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதனை மீண்டும் வலியுறுத்துவோம். தமிழகத்தில் விபத்து அதிகம் நடக்கக்கூடிய சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவசர கால சிகிச்சை மையங்கள் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அதனை மூடுவதற்கு தற்போது அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வருகிறது. இது கண்டனத்துக்குரியது. இதனை அரசு மூடினால் அதிமுக சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகளை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு குளோபல் டெண்டர் விடப்பட்டு மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

லோக்கல் சந்தையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மருத்துவத்துறையால் என்ஓசி வழங்கப்பட்டு வருகிறது. இது கூடாது, நோயாளிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. தற்போது சீதோஷ நிலை மாறி மாறி வருவதால் மருந்து தட்டுப்பாடு என்பது இருக்கவே கூடாது. அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவில் சென்னையில் விபத்து நடந்ததால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து சேர்வதற்கு ரெஸ்பான்ஸ் டைம் என்பது எட்டு நிமிடமாக இருந்தது. அதை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது அதை ஒட்டி ரெஸ்பான்ஸ் வந்தாலும் இதனை குறைப்பதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் முத்துலட்சுமி ரெட்டி உதவித்தொகை ஆகியவை காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. காலதாமதம் இன்றி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

  • Thalpathy 69 last flim vijay solid deal in north America வடஅமெரிக்காவில் சூப்பரான டீல் போட்ட விஜய்? மாஸ் காட்டும் தளபதி 69!
  • Views: - 456

    0

    0