அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகள்… இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகப்போகும் அறிவிப்பு ; விஜயபாஸ்கர் சொன்ன தகவல்

Author: Babu Lakshmanan
5 March 2024, 10:43 am

எதிர்ப்புகள் திமுக அரசுக்கு அதிகரித்து வருவதால் நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது என்றும், இதனை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது ;- தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால், இளைஞர்கள் பெரும் பாதிக்கப்பட்டு போதை கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். இதனை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது. திமுக நிர்வாகிகளை போதை பொருள் விற்பனை மற்றும் மொத்த விற்பனையை செய்து வருவது பெரும் கண்டனத்துக்குரியது.

மக்களைத் தேடி மருத்துவம் என்று கூறிவிட்டு மக்களை தேடி போதைப் பொருள் என்று திமுக நடைமுறைப்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி என்று கூறிவிட்டு இல்லம் தேடி கஞ்சா விற்பனை செய்து வருகிறது.

மின்சார கட்டணம் வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட அவற்றை கடுமையாக உயர்த்தி விட்டது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுவது கிடையாது. இது போன்ற பிரச்சனைகளால் மக்கள் திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய வெறுப்பில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சரி, இனி திமுகவிற்கு பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வெறுப்பை மூன்று வருடத்திலேயே சம்பாதித்து விட்டனர். அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது அதிமுக தான்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்று இன்னும் ஓரிரு நாட்களில் மக்களுக்கு தெரிய வரும். நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர், எனக் கூறினார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!