இலங்கைக்கு செல்லும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை.. தமிழக அரசுக்கு சொன்ன சூப்பர் யோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 2:47 pm

இலங்கைக்கு செல்லும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை.. தமிழக அரசுக்கு சொன்ன சூப்பர் யோசனை!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்க்கும் காளை கலந்து கொண்டு வெற்றி பெற்றது.

அதை பார்வையிட்ட பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு மதுரையிலே முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

திருச்சியிலே இன்று முதல் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனது பொதுவான வேண்டுகோள் அரசு ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், துணை நிற்க வேண்டும், ஜல்லிக்கட்டு விழா என்பது 20கல்யாணத்தை ஒரே நேரத்தில் நடத்துவது போல மிகவும் கஷ்டமானது.
எல்லா துறையும் இணைந்து செயல்பட்டு உள்ளனர்.

மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் உற்சாகமாக இருப்பதால் இன்னும் அதிக அளவில் பாதுகாப்பினை ஏற்படுத்திட வேண்டும். ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் டோக்கன் வழங்கக் கூடாது என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

மாடு டோக்கன் படி கொண்டு வந்தால் தான் சிறப்பாக இருக்கும். அப்போது தான் டோக்கனை கணக்கிட்டு அந்த நேரத்திற்கு வரலாம். சில இடங்களிலே இந்த சிஸ்டம் செயல்பட்டு வருகிறது. சில இடத்திலே ஒத்துழைப்பு இல்லை. நாம் ஜாதி பேதமின்றி, கட்சி பேதமின்றி இந்த விழாவில் நடத்துகிறோம். இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவிற்கு என்னை அழைத்தார்கள். , போக முடியவில்லை செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு ஆர்வலர் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் ஜல்லிக்கட்டை கடல் கடந்தும் தமிழருடைய பெருமை சாற்றி வருகிறார்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றால் அரசு வேலை வழங்கப்படும் என்பது கோரிக்கையாக உள்ளது என்ற கேள்விக்கு, ஜல்லிக்கட்டு விழா நடத்தக்கூடிய கமிட்டிக்கு அரசு துணை நிற்க வேண்டும், மாவட்ட நிர்வாகமும் துணை நிற்க வேண்டும். மாடு பிடி வீரர்களும் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பொழுது இது பாதுகாப்பான விளையாட்டாக மாறி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் சட்டதிட்ட நெறிமுறைகளை செயல்படுத்தி வருகிறோம் மிகுந்த மகிழ்ச்சி.

அடுத்த முறை இலங்கையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் உங்கள் காலை பங்கேற்குமா என்ற கேள்விக்கு,அடுத்த முறை நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு காளையை கப்பலில் அனுப்பி விடுகிறேன் என்று மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…