முன்னாள் பாமக நிர்வாகி அலுவலகத்தில் வெட்டிக்கொலை ; 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்… பதப்பதைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
12 December 2023, 10:30 am

திருச்சியில் முன்னாள் பாமக நிர்வாகி அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்த பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (46). நேற்றிரவு 9.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் அலுவலகத்தில் உள்ளே வைத்து பிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பிரபு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெட்டி கொலை செய்யப்பட்ட பிரபு பாமகவில் தொழிற்சங்க நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர். பிரபுக்கு பல ரவுடிகளுடன் தொடர்பில் இருந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாகவே பிரபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வேறு காரணம் உண்டா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!