போதையில் இளைஞர்களிடம் முன்னாள் ராணுவ வீரர் ரகளை.. பதம் பார்த்த கிரிக்கெட் ஸ்டம்ப் : அதிரடி ஆக்ஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 1:06 pm

கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆன்றணி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் வியாழக்கிழமை இரவு திக்கணம்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பாரில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு மது அருந்த சென்ற திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த ஆன்றணி தாஸ் மற்றும் அபிஷாந்த் ஆகிய இரு இளைஞர்களிடம் போதையில் இருந்த வர்கீஸ் ஆன்றணி வம்பிழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பாரை விட்டு வெளியே வந்த வர்கீஸ் ஆன்றணியை கிரிக்கட் ஸ்டெம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த வர்கீஸ் ஆன்றணி சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் ஆன்றணி தாஸ் மற்றும் மற்றும் அபிஷாந்த் ஆகிய இரு இளைஞர்களையும் நேற்றிரவு கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!