பெட்ரோல் விலையும் உயருமா? கலால் வரி உயர்வு : மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2025, 3:59 pm
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய அரசு.
பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது. கச்சா எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை மாற்றி வந்தன.
இதையும் படியுங்க: கமிஷ்னர் சென்ற கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. பரபரப்பு : விசாரணையில் இறங்கிய புலனாய்வு!
கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால், பெட்ரோல் டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். குறிப்பாக கச்சா எண்ணெயின் விலை 4.5 சதவீதம் சரிந்து 59.16 டாலருக்கு ஒரு பீப்பாய் விற்பனையகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய், 4.39 சதவீதம் குறைந்து 62.7 டாலருக்கு பீப்பாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை .2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையல், பெட்ரோல், டீசல் விலை உயராது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்ததுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளார்.
