முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தை முந்த முயன்ற இளைஞர்… கான்வாயை சுற்றி வைளத்ததால் பரபரப்பு : விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 4:37 pm

சென்னை : முதல்வரின் கான்வாயை பைக்கில் முந்த முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை காமராஜ் சாலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாய் சென்று கொண்டிருந்தது. தலைமை செயலகத்தில் இருந்த வழக்கம் போல தன்னுடன் வீட்டுக்கு முதல்வர் கார் பாதுகாப்பு வாகனங்களுடன் சென்றது

அப்போது நேப்பியர் பாலத்தை கடந்து சென்ற போது, திடீரென சாலையில் எதிர்திசையில் இருந்து ஆக்டிவா வாகனத்தில வந்த இளைஞர் குறுக்கே வந்தார். இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபர் சென்னை கேகே நகரை சேர்ந்த அஜித்குமார் என்பதும், இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததும் தெரியவந்தது. பைக்கை பறிமுதல் செய்த போலீசார் நடத்தி விசாரணையில், அது திருட்டு பைக் என்பது தெரியவந்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 627

    0

    0