எங்க போனது கனிவு? புகார் கொடுக்க வந்தவர்களை அடிக்க கை ஓங்கிய அமைச்சரால் பரபரப்பு : வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2022, 2:30 pm
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணியை துவக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியல் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரூ. 8 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டிலான புனரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
அந்நிகழ்ச்சியின் போது ராமானுஜபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் குளம் சீரமைப்பு தொடர்பாக புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது பொதுப்பணி துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாமென்றும், கிராம மக்கள் சார்பாக விடப்படும் ஏலத்தை செயல்படுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தபோது, அமைச்சர் தா.மோ. அன்பரசன் கையை ஓங்கி அடிக்க முற்பட்டப்படி கோபப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, காண்போரை முகம் சுளிக்க வைத்தது. புகார் மனு அளிக்க வருவோரிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அமைச்சரே கோபப்பட்டு அடிக்க கை ஓங்கலாமா என சமூக ஆர்வலரகள் வேதனை தெரிவித்தனர்.