கரூர் : கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்திய இளைஞரை போலீசா மீட்டு தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தென்னிலை பகுதிக்கு உட்பட்ட அவுத்திபாளையம் ஊரில் வசித்து வருபவர் இளைஞர் நல்லசிவம்.
இவருக்கு சொந்தமான தோட்டத்தை, அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் தனது இடம் எனக் கூறி ஆக்கிரமித்துக் கொண்டதால் கடந்த ஒரு வருட காலமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும், காவல் நிலையத்திற்கு அலைந்து எவ்விதபயனும் இல்லாத காரணத்தினால், இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் மன விரக்தியில் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து விஷம் அருந்தியுள்ளார்.
இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இளைஞர் ஒருவர் விஷம் அருந்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த இளைஞர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் வாழ வழி இல்லை இருப்பதற்கு இடமும் இல்லை, அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதி வைத்து பின்னர் இதனை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
This website uses cookies.