ஆபத்தை உணராமல் உற்சாக குளியல் : சீற்றத்தில் குமரி முக்கடல்… சங்கமத்தில் சங்கமித்த சுற்றுலாபயணிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2022, 9:44 pm
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடலோர பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டது.
அதேபோல் இன்றும் காலை முதல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது .
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடல் சீற்றத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.