அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : 5 பேர் சரண்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 11:43 am

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : 5 பேர் சரண்!!

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பார்த்திபன் என்பவர் நடை பயிற்சிக்காக வெளியே சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு காரணங்களுக்காக நடைபெற்றதா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சென்னை மணலியை சேர்ந்த ஹரி(எ)கெளரிசங்கர், காசிமேடு மோகன் மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் ஆகிய மூவரும் ஆற்காடு முன்சீப் கோர்டு நீதிபதி திவ்யா முன்னிலையில் சரணடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மூவரையும் 15 நாள் வேலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சங்கர் முருகேசன் சேலம் நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளனர்.

சென்னை செங்குன்றம் பகுதியில் கொலை செய்த குற்றவாளிகள் ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!