இனி இந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு : பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 10:53 am

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், இந்த தோற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பல மாணவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான கருத்துருவை, தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்பிவிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அனைத்து பள்ளிகளும் கருத்துருவை அனுப்பியதை உறுதிப்படுத்தவும் , அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 1306

    0

    0