மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட மாணவி… சிறிது நேரத்தில் நடந்த சம்பவம்.. பதறியடித்து மருத்துவமனை தூக்கிச் சென்ற பெற்றோர்…!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 8:32 am

தாராபுரம் அருகே காலாவதியான மாத்திரையை பயன்படுத்திய மாணவி, மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (43). இவரது மனைவி சகிலாபானு (38). இவர்களின் 15 வயது மகள் தாராபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவிக்கு கடந்த இரு தினங்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவியின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து செல்லாமல், காளிபாளையத்தில் உள்ள மகேஷ் என்பவருக்கு சொந்தமான மருந்து கடையில் உடல் நிலையை கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி மாணவிக்கு மாலை 5 மணி அளவில் கொடுத்துள்ளனர்.

அதை சாப்பிட்ட மாணவி சுமார் ஒரு மணி நேரத்தில் வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு சென்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் உடனடியாக 108-ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி உட்கொண்ட மருந்து பெட்டியை கண்ட மருத்துவர்கள், இது ஏற்கனவே 2020-ல் காலாவதியான மருந்து எனக் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து காலாவதியான மருந்து மாத்திரைகள் விற்பனை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் காளிபாளையம் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 462

    0

    0