உண்ணாவிரதமா? உண்ணும் விரதமா? போராட்டத்திற்கு நடுவே உணவகத்தில் டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திமுகவினர்.. வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 11:37 am

திருப்பூரில், திமுக உண்ணாவிரத போரட்டத்தினியிடையே உணவகத்தில் திமுகவினர் காபி சிற்றுண்டி வாங்கி உண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய அரசு நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி , மாணவர் அணி மற்றும் மருத்துவரணி சார்பாக நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி , மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக, திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது. இந்நிலையில், உண்ணாவிரத போராட்டம் துவஙகிய சில மணி நேரங்கள் கழித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போராட்ட மேடைக்கு அருகாமையில் இருந்த உணவகத்தில் காபி , சிற்றுண்டி உண்ணும் வீடியோ தற்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

உண்ணாவிரத போராட்டம் என அறிவித்து விட்டு, பசிக்கும்ல சாப்பிடக்கூடாதா என்ற தொனியில் திமுகவினர் உணவகத்தில் டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 463

    0

    0