கோவையில் போலி மதுபாட்டில் விற்பனை ஜரூர்… கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது… மேலும் ஒருவருக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 9:40 am

கோவையில் போலி மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே போலி மதுபானம் தயாரிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் தொட்டிப்பாளையம் பகுதியில் போலீஸ் நேரடியாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் போலி மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த அருண் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்தது தெரியவந்துள்ளது. அவர்களை போலீஸ் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கேரளாவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, வேதிப்பொருள்கள் கலந்து வீட்டில் மதுபானம் தயாரித்துள்ளனர். தயாரிக்கப்பட்ட மதுபானத்தை பாட்டிலில் ஊற்றி பிரபல நிறுவனங்களின் லேபிள்களை ஒட்டியுள்ளனர். பிறகு இதை கேரளாவுக்கு சென்று விற்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 1,667 மதுபாட்டில்கள், நிரப்பப்படாத பாட்டில்கள் 1,745 மற்றும் எரிசாராயம் 180 லிட்டர், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்களுக்கு தலைவனாக செயல்பட்டு வரும் அனில்குமார் என்பவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

மேலும் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக போலி மதுபானம் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவில்பாளையம் – காரமடை சாலை அருகே எழில் ரெஸ்டாரன்டில் போலி மதுபானம் விற்பனை செய்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்