போலி என்சிசி முகாம் பாலியல் விவகாரம் : தோண்ட தோண்ட சிக்கும் புள்ளிகள்.. ஜிம் மாஸ்டர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 10:32 am

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் போலி என் சி சி முகாம் நடத்தி 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறப்பு புலாண்யு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிவராமனுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உடந்தையாக இருந்த பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என் சி சி மாஸ்டர் என இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு உடந்தையாக இருந்த காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.

இவர் சம்பவத்தின் போது சிவராமனுக்கு உடந்தையாக இருந்தது சிறப்பு புலாண்ய்வு குழு விசாரனையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: ஆதார் அட்டை புதுப்பிக்கணுமா? செப் 14ம் தேதி தான் கடைசியா? பதட்டமே வேண்டாம் : இத மட்டும் செய்யுங்க…!!

இதுவரை இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி சிவராமன் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?