போலி அரசியலை உடைக்க வேண்டும்… எந்த மதத்திற்கு சொந்தமான கட்சி பாஜக கிடையாது : அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 7:27 pm

சென்னையில் இன்று பா.ஜ.க. சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முதல் முறையாக பா.ஜ.க. நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைத்து மதங்களைச் சேர்ந்த சான்றோர்கள், பெரியோர்களையும் ஒரே மேடையில் இணைத்துள்ளது.

பா.ஜ.க. கட்சியில் எல்லா மதத்தில் இருந்தும் தலைவர்கள் வருவார்கள். இது ஒரு மதத்திற்கு சொந்தமான கட்சி இல்லை. அது மக்களுக்கு புரிவதற்கு சற்று காலம் ஆகும். அதுவரை கட்சி கடுமையாக வேலை செய்ய வேண்டும்.

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சிறுபான்மையாக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்தில் பெரும்பான்மையாக இருப்பார்கள். எனவே சிறுபான்மை, பெரும்பான்மை என்பதைத் தாண்டி இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். போலி அரசியலை உடைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என அண்ணாமலை பேசினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!