போலீசாரின் கவனத்தை திசை திருப்பிய போலி நிருபர்கள் : விசாரணையில் சிக்கிய பொட்டலங்கள்.. ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 6:09 pm

போரூரில் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் போரூரில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி சோதனை செய்தபோது பத்திரிகையாளர்கள் என்று தெரிவித்தனர்.

இருப்பினும் போலீசார் விடாமல் அவர்களிடம் விசாரித்த போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை செய்து சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனால் உடன் வந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரித்தபோது சூர்யா (வயது 30), பிரவீன் (வயது 29), என்பதும் இவர்களிடமிருந்து 3 1/2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் பத்திரிகையாளர் என வைத்திருந்த அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து விசாரித்த போது போலீசார் அனைத்து வாகனங்களையும் மடக்குவதாகவும் பத்திரிகையாளர்களின் வாகனங்களை மட்டும் மடக்காமல் இருப்பதால் பத்திரிகையாளர்கள் போன்று அடையாள அட்டைகளை அடித்து கொடுத்து மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை எடுத்து சென்று சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் இதில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் போன்று அடையாள அட்டை வைத்து கொண்டு கெஞ்ச விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி