ஒரிஜினல் இல்ல டூப்ளிகேட்… போலி வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை தயாரிப்பு : தனியார் பிரிண்டர்ஸ் கடைக்கு சீல்.. போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan13 June 2022, 4:29 pm
விழுப்புரம் : திண்டிவனத்தில் போலியாக வாக்காளர் அட்டை தயாரித்த (தனியார்) ராகவேந்திரா பிரிண்டர்ஸ் கடைக்கு சார் ஆட்சியர் அமித் சீல் உரிமையாளர் சுரேஷ் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் இன்று தாலுகா அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை எடுத்து வந்தார்.
அப்பொழுது இந்த வாக்காளர் அடையாள அட்டை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக இ சேவை மையத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் இதுகுறித்து செல்வராஜை பிடித்து தாசில்தார் வசந்த் கிருஷ்ணன் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் சென்னை சாலையில் ஸ்ரீ ராகவேந்திரா வைத்திருக்கும் கடையில் எடுத்தது என்று கூறியதை அடுத்து உடனடியாக இது குறித்து மேலும் திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கடைக்கு நேரடியாகச் சென்று கடையில் இருந்த கணினி மற்றும் பிரின்டர் போலியாக தயாரித்த வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.
பின்னர் இதுகுறித்து திண்டிவனம் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் தற்பொழுது ஸ்ரீ ராகவேந்திரா பிரிண்டர்ஸ் உரிமையாளர் சுரேஷ் (52 வயது) என்பர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாக்காளர் அடையாள அட்டை போலியாக தயாரித்து காரணம் என்ன விசாரணை மேற்கொண்டதில் ஆதார் கார்டுகளில் ஒரு சில பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு கலர் ஜெராக்ஸ் எடுத்து இதுபோன்று இவர் செய்து வந்தது தற்பொழுது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற ஜெராக்ஸ் கடை மற்றும் பல்வேறு ஆப் செட்களை சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.