மேடையில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை… செல்பி எடுக்க முண்டியடித்த இளைஞர்கள்… ஆரவாரம் செய்ததால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 2:28 pm

சேலம் ; சேலம் அருகே நடனக்கலைஞர்களுடன் பிரபல நடிகை மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி ஸ்ரீ பூவாயம்மாள் பண்டிகையை முன்னிட்டு நட்சத்திர கலை விழா பெற்றது. இதில், பிரபல நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். அவர் வருகையை கண்டதும் ஏராளமான இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து, சின்ன மச்சான் பாடலுக்கு கலைஞர்களுடன் மேடையில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். நடனத்தைக் கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விசில் பறக்க ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

நிக்கி கல்ராணி உடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் காவல்துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தினர். மேலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒருமுறை பாடலுக்கு நடனமாடி அந்த பகுதியில் இருந்து கிளம்பி சென்றார்.

https://player.vimeo.com/video/817877464?h=f8f3b1198a&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்