ரூ.2 கோடி அப்பு… பிரபல இயக்குனருக்கே டேக்கா காட்ட முயற்சி.. பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 12:07 pm

புதுக்கோட்டை; பசங்க திரைப்படம் இயக்கிய இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல ஜவுளி கடை உரிமையாளர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் பசங்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனராக உள்ளார்.

இவரிடம் இவருடைய நண்பராக இருந்த குமார் என்பவர் புதுக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார். வணிக ரீதியாகவும், நிலம் வாங்கி தருவதாகவும் கூறி திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்திற்குள் பணமும் தரவில்லை, நிலமும் வாங்கித் தரவில்லை. இது குறித்து பலமுறை திரைப்பட இயக்குனர் பாண்டியராஜ் கேட்டபோது ஒரு கட்டத்தில் அவர் ஒரு இடத்திற்கான பத்திரத்தை கொடுத்துள்ளார். ஆனால், அந்த பத்திரம் போலியானது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ், புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் ஏமாற்றிய குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜாரப்படுத்தினர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 509

    0

    0