குடும்பத் தகராறு : கணவனை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மனைவி : போலீசார் விசாரணை

Author: kavin kumar
13 February 2022, 11:10 pm

கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவரை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் நரேஷ்குமார் (39). இவருக்கு அதே பகுதியை சேரந்த சசிகலாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சசிகலாவின் தந்தை மகாலிங்கத்தை நரேஷ்குமார் கொன்றதாக வழக்கு உள்ள நிலையில், கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று சசிகலாவை சமாதானப்பத்தி வீட்டிற்கு வர அழைத்து வர நரேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது இருவருக்கு இடையோ நடந்த பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சசிகலா நரேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆங்கேயே சரிந்து விழுந்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத சசிகலா அருகே கிடந்த கல்லைக் கொண்டும் தாக்கியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் நரேஷ்குமாரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் கணவர் தாக்கியதில் இடுப்பில் காயமடைந்த சசிகலா போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1263

    1

    0