திருச்சியில் குடும்பத்தகராறில் கல்லூரி பெண் ஊழியரை சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சுப்பிரமணியபுரம், கென்னடி தெருவில் சேர்ந்தவர் முகமதுபாபு என்ற கண்ணன் (40). பெயிண்டர். இவருடைய மனைவி சமீமாபேகம் (34). இவர் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமீமாபேகம் தனது தாயாருடன் வசித்து வந்தார். முகமதுபாபு அவ்வப்போது, அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டிற்கு வரச் செல்லிவிட்டு செல்வார்.
அதுபோல் இரவு முகமதுபாபு வீட்டுக்கு வந்த போது கணவன் – மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த முகமதுபாபு மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவி சமீபாபேகத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் அவருக்கு வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த சமீமா பேகத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முகமதுபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.