சொத்துக்காக சொந்த தம்பி மற்றும் மகனை கொலை செய்த கொலைகார குடும்பம் : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 3:39 pm

திருச்சி : சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அடுத்துள்ள வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 69). இவரது அண்ணன் அரோக்கியசாமி. இவர்கள் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் பலமுறை இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரோக்கியசாமி அவரது மகன் சசிகுமார், அவரது மனைவி தனமேரி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகனான நெப்போலியன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆரோக்கியசாமி மகன் மற்றும் மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகன் நெப்போலியனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இதுதொடர்பான கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இன்று நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கியசாமி மகன் சசிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஒரு வருடம் சிறை தண்டனையும், ஆரோக்கியசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், ஆரோக்கியசாமியின் மனைவி தனமேரிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதறை தொடர்ந்து சசிகுமார் மற்றும் ஆரோக்கியசாமி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனமேரியை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 676

    0

    0