‘பைக் இருந்தா தானே மறுபடியும் வருவ’… கோபத்தில் மருமகனின் பைக்கை கொளுத்திய மாமியார்..!!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 2:02 pm

நாட்றம்பள்ளி அருகே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி, தாயுடன் சேர்ந்து கணவனின் இருசக்கர வாகனத்தை மண்ணினை ஊற்றி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதி சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்துக்குமார் (36). இவருக்கும் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் சசிகலா (30) என்ற பெண்ணுடன் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3ஆண் பிள்ளைகள் உள்ளன.

மேலும் படிக்க: அடக்குமுறையை ஏவி தடுக்க நினைப்பதா..? மக்களாட்சித் தத்துவத்திற்கு மாபெரும் கொடுமை : சீமான் ஆவேசம்!!

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டதால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு சசிகலா சென்றுள்ளார். இந்த நிலையில், தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சென்று, முத்துக்குமார் தனது மனைவி சசிகலாவை வீட்டிற்கு அழைத்து உள்ளார்.

அப்போது, திரும்பவும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சசிகலா மற்றும் அவரின் தாயாரான சின்ன பாப்பா ஆகிய இருவரும் சேர்ந்து முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதில், பைக் முழுவதும் தீக்கிரையானது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?