வேலை கிடைக்காத கொடுமை.. குடும்பத்துடன் தற்கொலை செய்த கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2025, 12:14 pm
தெலுங்கானா நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்த சந்திரசேகர் ரெட்டியின் (44) குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு முன்பு ஐதராபாத் ஹப்சிகுடாவிற்கு குடிபெயர்ந்து வந்தனர். சந்திரசேகர் ரெட்டி சிறிது காலம் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இதையும் படியுங்க : அரசு வீடு வாங்கித் தாரேன்.. மாநகராட்சி அதிகாரிகளை கைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி!
கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆறு மாதங்களாக வேலை கிடைக்காமல் இருந்ததால் குடும்பம் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். இந்த நிலையில் திங்கட்கிழமை மகன் விஸ்வன் ரெட்டிக்கு (10) விஷம் கொடுத்தும் மகள் ஸ்ரீதா ரெட்டி (15) தூக்கிட்டு பின்னர் சந்திரசேகர் ரெட்டி தனது மனைவி கவிதாவுடன் (35) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து உஸ்காமனியா பல்கலைக்கழக போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் சந்திரசேகர் எழுதியதாக தற்கொலைக் கடிதம் ஒன்றை கைப்பற்றி உள்ளனர்.

அதில் ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டதற்கு வருந்துகிறேன்.’ எங்கள் வாழ்க்கையில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். “நான் நீரிழிவு நோய், நரம்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சந்திரசேகர் ரெட்டி தனது தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
