விஜய்யின் ஆஸ்தான இயக்குநர் பட விழாவில் அஜித் டி-ஷர்ட் அணிந்து வந்த பிரபல நடிகர் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 5:13 pm

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இருவரும் நிஜ வாழ்வில் நண்பர்களாக இருந்தாலும் இவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் பெரியவர் என்று சுமார் 20வருடங்களுக்கு மேல் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.

இப்படியிருக்கையில், தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா. இவர் தமிழில் போக்கிரி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து வில்லு படத்தை இயக்கினார்.

பாலிவுட்டுக்கு சென்ற அவர், மீண்டும் தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மை டியர் பூதம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் பொய்க்கால் குதிரை. பிரபுதேவாவுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார்,, ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் பொய்க்கால் குதிரை படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரஸ்மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஜான் கொக்கன் வந்திருந்தார். ஆனால் அந்த அரங்கத்தில் அனைவரின் பார்வையும் ஜான் கொக்கைன் அணிந்திருந்த டிஷர்ட் மீது தான் இருந்தது.

காரணம் அவர் அணிந்த டி ஷர்ட்டில் அஜித் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பட்டபோது, நான் அஜித் ரசிகன், அதனால் அவர் போட்டோ டி சர்ட் அணிந்து விழாவுக்கு வந்தேன் என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 777

    8

    1