மோசமான உடல்நிலை காரணமாக தவிக்கும் பிரபல நடிகர்.? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Author: Rajesh
23 May 2022, 5:14 pm

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமையால் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் டி. ராஜேந்தர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்போது டி. ராஜேந்தர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.

ஆனாலும், இங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சிம்பு-வுக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. ஆகையால், மேல் மருத்துவ சிகிச்சைக்காக சிம்பு, அவரின் தந்தையை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை நல்லபடியாக முடிந்து, டி. ராஜேந்தர் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் விருப்பம்..

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!