ராஜ்ய சபா எம்.பி.-யாகிறாரா பிரபல வில்லன் நடிகர்.? வெளியான பரபரப்பு தகவல்..!

Author: Rajesh
14 May 2022, 4:01 pm

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவரான நடிகர் பிரகாஷ்ராஜ், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். நடிப்புத் திறமையில் தனித்துவமான நடிப்பின் மூலம், மொழிகளைக் கடந்து ரசிகர்களை கொண்டுள்ளார்.
அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கிறார். தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை பேசி வருகிறார இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நின்று பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
இந்நிலையில், நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளன. சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் காரணமாக, காலியாகவுள்ள இந்த 3 எம்.பி பதவிகளையும், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவை, அவரின் எர்ரவல்லி பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்.

ராஜ்ய சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு மற்றும் பாஜகவை, பிரகாஷ்ராஜூம், தெலங்கானா மாநில முதல்வரும் ஒரே மாதிரியாக எதிர்ப்பதால், நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் மனுதாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் தெலங்கானாவில் அடிபடுகிறது. இவர் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஆளும் கட்சி போட்டியின்றி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்