3 பெண்கள் என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க.. புலம்பி தள்ளும் பிரபல நடிகர்.!

Author: Rajesh
1 May 2022, 1:31 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றமபலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் திரைப்பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த ஒரே இயக்குனர் வெற்றிமாறன், இவரின் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிக சிறந்த படங்களாக பார்க்கப்படுகிறது.

அப்படியான சிறந்த கூட்டணி குறித்து தனுஷ் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் சொன்ன விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் கூறியதாவது. ” நான் லைஃப்ல ரொம்ப ரொம்ப நம்பிக்கை வெச்ச நாலு பேர்ல ஒருத்தர் வெற்றிமாறன். மீதி மூனு பேரும் பொண்ணுங்க. அவ்வளவு நம்பிக்கையே நான் யாரு மேலயும் வெச்சது இல்ல. பாக்கி 3 பேரும் என்னை கீழே தள்ளி விட்டுட்டாங்க.

என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் மட்டும்தான். அதைவிட பெரிய விஷயம் என்னன்னா வெற்றியை சுவைத்ததுக்கு அப்புறம் வெற்றிய பார்த்ததுக்கு அப்புறம் என்ன மறந்துட்டு போன ஒருத்தர எனக்கு தெரியும்.

அதைவிட பெரிய வெற்றியைப் பார்த்த வெற்றிமாறன் தனுஷ விட்டு நான் வரமாட்டேன்னு இன்னும் என் கூட இருக்காரு” என வெற்றிமாறன் உடனான தனது நட்பையும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை குறித்தும் தனுஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் தனுஷ் சொன்ன அந்த பெண் அவரின் மனைவியாக தான் இருக்க முடியும் என கூறிவருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?