அதுக்கு தானா என் கூட நடிக்கல.. நடிகை மீனாவிடம் ஓப்பனாக கேட்ட பிரபல நடிகர்..!

Author: Rajesh
26 May 2022, 6:04 pm

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய நடிகையாக மாறியவர் தான் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை நடிகர் விஜய் கூட மீனா சேர்ந்து நடித்ததில்லை. ஷாஜகான் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சேர்ந்து ஆடியுள்ளார். இதனிடையே ஆரம்பகாலத்தில் விஜய்யின் படத்தில் நடிக்க மீனாவிற்கு வாய்ப்பி வந்ததாம்.

ஆனால் அந்த நேரத்தில் அவர் படங்களில் கமிட் ஆகி இருந்ததால், அவரால் விஜய் கூட சேர்ந்து நடிக்க முடியவில்லையாம். இதனாலயே எல்லா படங்களுமே என்னை விட்டு போய்விட்டது என்று கூறினார். ஆனால் மீனாவால் முடியாததை மீனாவில் மகள் நிறைவேற்றினார். தெறி படத்தின் மூலம் விஜயின் மகளாக நடித்திருப்பார்.

அப்போது சூட்டிங்கிற்கு மீனாவும் தன் மகளுடன் செல்வாராம். அப்பொழுது விஜய் சொன்னாராம். அன்னைக்கு தேதி கிடைக்காமல் என் கூட நடிக்காமல் இருந்தீர்கள் இன்று சும்மா வந்து உட்காந்தும் நம்ம சேர்ந்து நடிக்க வாய்ப்பு அமையல என்று கூறினாராம். மேலும் இருந்தாலும் உங்களுக்கு என்னை விட அஜித் தான பிடிக்கும் அதனால தான என் கூட நடிக்கல என கிண்டல் அடித்து பேசுவாராம். இவ்வாறு மீனா கூறியுள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!