விஜய்யுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..? வந்த வாய்ப்ப இப்படி விட்டுட்டீங்களே ..!

Author: Rajesh
21 April 2022, 11:16 am

விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தில் நடிக்கிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் முதல்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதேபோல் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார். தளபதி 66 படம் சென்டிமெண்ட் கலந்த காதல் படமாக இருக்கும் என முன்பே தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக இரண்டு முக்கிய பழைய ஹீரோக்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். அதில் ஒருவர் வெள்ளி விழா நாயகன் மைக் மோகன். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகன் விஜய்க்கு அண்ணனாக நடிக்கயுள்ளார்.

இவரை தொடர்ந்து இரண்டாவது அண்ணனாக சாக்லேட் பாய் பிரசாந்தை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அதற்கு பிரசாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்தவர் பிரசாந்த். ஆனால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் திரைவாழ்க்கையில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் சிறிது காலம் படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர் மட்டும் அப்போது தொடர்ந்து படங்களில் நடித்திருந்தால் இன்று அவருடைய மார்க்கெட் வேற லெவல் இருந்திருக்கும்.

இந்நிலையில் தற்போது தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் பிரஷாந்த் நடித்துள்ளார். விஜய்க்கு ஒரு காலகட்டத்தில் டஃப் கொடுத்த பிரசாந்த் தற்போது அவருக்கு அண்ணனாக நடித்தால் தனது மார்க்கெட் இழந்து விடும் என்பதால் டீசன்டாக மறுத்துவிட்டார். மேலும் அந்தகன் படத்தை தொடர்ந்து பிரசாந்துக்கு நிறைய படங்கள் வரிசையில் உள்ளது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 1318

    1

    0