மீண்டும் அஜித்துடன் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை : யாரும் எதிர்பார்க்காத மெகா கூட்டணியால் ரசிகர்கள் ஹேப்பி!!
Author: Udayachandran RadhaKrishnan26 January 2022, 5:23 pm
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக வேண்டிய நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டும் அனுமதி என்பதால் பட தயாரிப்பாளர் போனி கபூர் ரிலீசை தள்ளி வைத்துள்ளார்.
ஏற்கனவே அஜித் – போனி கபூர் – இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணி நேர் கொண்ட பார்வை , வலிமை படத்தில் இணைந்து பணியாற்றியது. தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் ஏற்கனவே அஜித்துடன் நடித்து ஹிட் ஆகிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த தபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தபு தமிழில் குறைவான படத்தில் நடித்தாலும் நிறைவான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித் தபு நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் சந்தன தென்றல் பாடல் இன்றளவும் பெருமளவு ஹிட் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.