இயக்குனர்களின் பிடியில் நடிகைகள்..? ஆண்டிரியாவை தொடர்ந்து நிர்வாண காட்சியில் நடிக்க, மற்றொரு நடிகையை அனுகிய பிரபலம்.!

Author: Rajesh
7 May 2022, 2:37 pm

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ஆண்ட்ரியா. தனது கிளுகிளுப்பான குரலில் இளைஞர்களின் கைகளை கட்டிப்போட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா…’ பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது.

இதனிடையே மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த ‘பிசாசு-2’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ‘பிசாசு-2 படத்தில் 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்தபோது, என்னை மிகவும் கட்டாயப்படுத்தினார்கள். நான் நன்றாக யோசித்து பார்த்தேன். அது தரமான கதை என்பதால் நிர்வாணமாக நடித்தேன்’ கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை பூர்ணாவும் இது போன்ற நிகழ்வு தனக்கும் நடந்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, ‘ஒரு பிரபல இயக்குனர் ஒருவர் ஓடிடி வெப் தொடர் நடிக்க என்னை அணுகினார் என்றார். அவர் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அதில் நிர்வாண காட்சி ஒன்று இருந்தது. அந்த காட்சி கதைக்கு மிகவும் முக்கியமான காட்சி. எனவே அதை நீக்க முடியாது.

ஆனால் என்னால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், நான் அந்த கதையில் நடிக்க மறுத்து விட்டேன் என கூறியிருக்கிறேன். சமீபகாலமாக, நடிகைகளை இது போன்ற காட்சிகளின் நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சி செய்து வருவது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கதைக்காக நிர்வாண காட்சி வைக்கிறார்களா..? இல்ல, நிர்வாண காட்சிக்காக கதை என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1591

    0

    0