சிம்புவிடம் பிரபல நடிகை கேட்ட அந்த கேள்வி.. வெந்த புண்ணில் இப்படி வேல் பாய்ச்சலாமா..?
Author: Rajesh29 April 2022, 6:26 pm
சினிமாத்துறையில், பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாதவர் தான் நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறு வயதிலேயே கலக்கி இருப்பார். அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற படங்கள், சினிமாத்துறையில் அவருக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்தது.
சினிமாவில், மட்டுமல்லாமல், காதல் வாழ்விலும் சிம்பு பல இன்னல்களையும், தோல்விகளையும் நடிகர் சிம்பு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வாலை காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த உள்ளன. இந்த ஜோடி விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் தான் சிம்பு குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவுடன் சேர்ந்து செக்கச் சிவந்த வானம் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த சமயம் சிம்புவை நிறைய கலாய்த்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும், சிம்புவிடம் ஏன்? சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வரமாட்டீங்களாமேனு ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்க, அதற்கு சிம்பு நான் சின்ன வயசுல இருந்தே நடிக்க வந்து இப்ப வரைக்கும் நடிப்பு நடிப்புனு என்னால சுத்தமா முடியல, அதனால எனக்கு பிரேக் தேவைப்படுது, அதனால் தான் இப்படியெல்லாம் என கூறினாராம். அத கேட்டதும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.