ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரியங்கா மோகன்.? வைரலான கிசுகிசுவால் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 9:48 pm

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தற்போதைய முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகனன் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர், அந்த காலத்து ஸ்ரீதேவி முதல் இந்த காலத்து நயன்தாரா வரை என முக்கிய நடிகைகளுடன் ஜோடி போடு நடித்துள்ளார். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா..? என்று பல நடிகைகளும் வெளிப்படையாகவே சொன்னதுண்டு.

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரியங்கா மோகன்.? காரணமான கிசுகிசு..!!

ஹீரோயின் கதாபாத்திரம் கூட வேண்டாம், ஒரு சீனில் வந்து செல்லும் காட்சியாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று பல நடிகைகள் சொல்லியிருப்பது அனைவரும் அறிந்தது.

இப்படியிருக்கையில், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தற்போதைய முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகனன் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரியங்கா மோகன்.? காரணமான கிசுகிசு..!!

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் மற்றும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக ஜெயம் ரவியின் 30வது படத்தில் நடித்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன் ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அதன்படி, பிரியங்கா மோகனை இப்படத்தில் நடிக்கவைக்க ஜெயிலர் படக்குழுவும் அணுகியதாகவும், ஆனால், அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரியங்கா மோகன் நிகராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இயக்குனர் நெல்சன் தான் என்று கூறப்படுகிறது.

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரியங்கா மோகன்.? காரணமான கிசுகிசு..!!

ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அப்போது இருவரையும் வைத்து சில கிசுகிசுக்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, தான் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று பிரியங்கா மோகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி