தொடர் தோல்வியால் துவண்டு போன பிரபல நடிகை.. கிடைத்த கேப்பில் தனி ரூட்டு போட்ட தனுஷ்.?
Author: Rajesh27 May 2022, 2:07 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தடுத்து நடித்து வருவதுடன, பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதையடுத்து ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிப்பில் ஓடிடியில் வெளியான சாணிக்காகிதம் திரைப்படத்தை ஆகா ஓகோ என்று அவரிடம் புகழ்ந்து தள்ளியிருக்கிறாராம் தனுஷ். இதனிடையே கடந்த சில பல மொழிகளிலும் பிஸியாக நடித்தாலும் பெரிய அளவில் படங்கள் வெற்றி பெறவில்லை என வருத்தமடைந்து இருந்த கீர்த்தி சுரேஷ்க்கு தனுஷ் புகழ்ந்தது ஆறுதலாக இருந்ததாம். ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அவரிடம், தனுஷ் நெருங்க முயற்சிக்கிறார் என்று திரையுலகில் தகவல் அடிபட தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, தனுஷ் தனது சொந்த வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறார். இதில் மேலும் ஒரு பிரச்சனையாக அவர் இப்படி செய்வது எல்லாம் அந்த பிரபல இசையமைப்பாளர் அனிரத்தை கடுப்பு ஏற்றுவதற்கு தானாம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ்-ம், அனிருத்-ம் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்யக் கூடும் என்றும் ஒரு தகவல் பரவி வருவதுதானாம். இந்நிலையில் தனுஷ் இந்த செயல் திரையுலகில் பேசும் பெருளாக மாறியுள்ளது.