தென்னிந்திய சினிமாவுக்கு முழுக்கு? பை பை சொல்லி மும்பைக்கு பறந்த பிரபல நடிகை..!!
Author: Udayachandran RadhaKrishnan3 April 2022, 3:43 pm
இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் மும்பையில் புது வீடு வாங்க நடிகை முடிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.
பின்னர் கோலிவுட்டில் சூர்யா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் , கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்த சமந்தா. கடந்தாண்டு நடிகர் நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தாவிற்கு, மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர சகுந்தலம், யசோதா, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் உள்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை சமந்தா, பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், நடிகை சமந்தாவும் இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்காக மும்பையில் புது வீடு வாங்க நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம். இதற்காக கடற்கரை அருகே ஒரு பங்களாவை தேர்ந்தெடுத்துள்ளாராம்.
அதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் சமந்தா, விரைவில் அந்த புது வீட்டிற்கு குடிபெயர உள்ளாராம்.