மின்வெட்டு குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பரபரப்பு புகார் : அமைச்சர் தங்கம் தென்னரசு ரியாக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2023, 11:58 am

சென்னை சாந்தோம், ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகத்தில் சிக்கல் உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டர் பதிவுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், நகரம் முழுவதும் மின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால், இதுபோல் நிகழ்கிறது.

இப்பிரச்னையை உடனடியாக சரி செய்ய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்; சிரமத்திற்கு வருந்துகிறோம்” என பதில் அளித்துள்ளார்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!