மயில்சாமி அண்ணன் இருந்த இடத்தில் கோவை குணா : நேரில் அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர் உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 4:59 pm

உடல் நலக்குறைவால் நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உயிரிழந்ததையடுத்து அவரது உடலுக்கு திரையுலகங்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர்.

பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றய தினம் உயிரிழந்தார்.

தற்போது கோவை விளாங்குருச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கபட்டது. அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் என அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்களான திருப்பாச்சி பெஞ்சமின் மற்றும் மூக்குத்தி முருகன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி குணாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பெஞ்சமின், கோவை குணா, நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் தங்களுடன் இணைந்து பணியாற்றியதாகவும் மிகவும் எளிமையான மனிதர் எனவும் தெரிவித்தார்.

இதுவரை யாருடைய மனதையும் அவர் புண்படுத்தியது இல்லை எனக் கூறிய அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் நண்பர்கள் உதவி என கேட்டால் அதனை கொடுத்துவிட்டு சென்றுவிடுவார் என தெரிவித்தார்.

நடிகர் மயில்சாமிக்கு அடுத்தபடியாக கோவை குணாவை அந்த இடத்தில் வைத்து பார்ப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் நல்ல மனிதர்களை எல்லாம் கடவுள் சீக்கிரமாக அழைத்துச் சென்று விடுவதாக கூறி வருந்தினார்.
தொலைக்காட்சி வருவதற்கு முன்பே கோவை குணா மிகவும் பிரபலமானவர் என தெரிவித்த பெஞ்சமின், அப்போது இருந்து அவருடன் இணைந்து நாங்கள் பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை குணாவின் ஆத்மா சாந்தியடைய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகவும் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பாகவும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கண்ணீர் மல்க கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 620

    0

    0