தமிழக சினிமா தொழிலாளர்கள் பாதிப்பு.. அஜித்-க்கு முக்கிய கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்..!
Author: Rajesh3 May 2022, 4:09 pm
தமிழ் முன்னணி நடிகர்களில் சிலர் தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும், வெளி மாநிலங்களில் நடத்துவது வழக்கம். குறிப்பாக விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளி மாநிலங்களில் தமிழக கிராமங்கள் போன்று செட் போட்டு நடத்தபடுகிறது.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
‘நடிகர் அஜித்குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால் தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வரும், வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என அஜித் மற்றம் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த்திடம் கோரிக்கை வைத்தபோது அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிலேயே செட் போடுவதற்காக உரிய இட வசதி உள்ளது. படத்தின் கதைக்கு தேவை என்றால் சில படங்களுக்கு வெளியில் சென்று படப்பிடிப்பு நடத்துவது தவிர்க்க முடியாது. ஆனால் ஹைதராபாத்துக்கு சென்று தமிழ்நாட்டின் ஊர்களை செட் போட்டு படமாக்குவது ஏற்புடையதல்ல’ என்றார். ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்இ யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளதாக செய்தி வந்ததுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு நேரடியாக எந்த கடிதமும் வரவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.