பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி : கவனத்தில் எடுத்த காவல்துறை..!

Author: Babu Lakshmanan
29 January 2022, 6:18 pm

சென்னை : பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டியில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டல் சங்கீதா. இந்த ஓட்டலில் திமுக மகளிரணி அமைப்பாளர் பாரதி தனது கட்சியினருடன் சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டு விட்டு பாரதி உள்ளிட்டோர் கழிப்பறையை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, அங்கு வெண்டிலேட்டர் அருகே சம்பந்தமில்லாமல், ஐஸ்கிரீம் அட்டை பெட்டி ஒன்று இருந்துள்ளது. இதனால், பாரதி சந்தேகமடைந்துள்ளார்.

இதனால், தனது மகனை அழைத்து அந்த அட்டையை எடுக்கச் சொல்லியுள்ளார். அதனை எடுத்தவுடன், அதில், செல்போன் கேமரா செயலில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், உடனடியாக, அந்த செல்போனை எடுத்துக் கொண்டு கிண்டி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். பின்னர், போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். மேலும், அந்த போனின் உரிமையாளரை கைது செய்து அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நேற்று தான் செல்போனை அங்கு வைத்ததாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 2743

    0

    0