கரூரில் பிரபல கொங்கு மெஸ் ஹோட்டலுக்கு சீல் : வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2023, 8:53 pm

கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் மணி என்கிற சுப்பிரமணி கடைக்கு வருமான வரி துறையினர் சோதனை கொங்கு மெஸ் வருமானவரித்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு உயர்தர சைவ உணவகத்தில் நேற்று வருமானவரித்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று வருமான வரித்துறையினர்,துப்பாக்கி ஏந்திய நிலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர் உதவியுடன் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொங்கு மெஸ் உரிமையாளர் கொங்கு மெஸ் மணி என்கின்ற சுப்பிரமணி என்பவர் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…