தமிழ் சினிமாவில் Adjust செய்ய என்னை அழைத்தார்கள் : சினிமாவில் நுழைந்த பிரபல செய்தி வாசிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2022, 9:25 pm
தெருக்கூத்து, மேடை நாடகம், டிவி தொடர் இப்படி பல்வேறு பல கலவையான துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
அந்த காலத்தில் இப்படிதான் சினமாவுக்கு வந்தார்கள். ஆனால் தற்போது டிவி தொடர்களில் நடிப்பவர்கள், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள், செய்தி வாசிப்பாளர்கள் எல்லாம் பாப்புலராக உடனே சினிமாவுக்கு நுழைந்து விடுகின்றனர்.
பிரபலமாகிவிட்டதால் சுலபமாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியில்லை, அவர்களும் சிலவற்றை எதிர்கொண்டுதான், சிலவற்றை வேறு வழியின்றி சகித்துகொண்டுதான் வந்துள்ளனர்.
பிரபல செய்தி தொலைக்காட்சியில் இருந்து வந்த அனிதா சம்பத், திவ்யா துரைசாமி, பிரியா பவானி ஷங்கர் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர்.
அனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மவுசை ஏற்றியுள்ளார். பிரியா பவானியோ முன்னணி நடிகர்களுடன் நடித்து, தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து சினிமா துறையில் என்ட்ரியாகி வருகிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் வாக உள்ள திவ்யா துரைசாமி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளது. இதையெல்லாம் தாண்டிதான் சினிமாவில் நுழைந்துள்ளேன் என பகீரங்கமாக ஓபனாக கூறியுள்ளார். இதனால் மீண்டும் தமிழ் சினிமாத்துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமாவில் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கின்றனர் என நடிகைகள் புகார்கள் கூறியுள்ள நிலையில், திவ்யா துரைசாமி கூறியுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை பிரபல பத்திரிகையாளரும், குணச்சித்திர நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.