கள்ளக்காதலியை மிரட்ட தூக்கு மாட்டி பயமுறுத்திய பிரபல ஆர்கெஸ்ட்ரா பாடகர் : விளையாட்டு வினையானது.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 5:24 pm

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 42). இவர் இசை கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார். திருமணமாகி (மனைவி மேரி) 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் பொன்னை பகுதியிலேயே வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து கள்ளத்தொடர்பில் இருந்த சித்ராவுக்கும், ராஜாவுக்கும் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சித்ராவை பயமுறுத்துவதற்காக, அறையில் படுத்திருந்த சித்ராவை மிரட்டிவிட்டு பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் இவர்கள் தங்கியுள்ள வீட்டின் ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதற்காக முயன்றுள்ளார்.

இதனை செல்போன் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்து அவரை கட்டித்தழுவி அழுதுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலுக்காக மனைவி பிள்ளைகளை விட்டு பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் பதபதைக்க வைக்கும் நேரலை காட்சி வெளியாகியுள்ளது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?