தயாரிப்பாளர கவுத்து அவங்க பொண்டாட்டி தாலியை அறுக்கற வேலையை மட்டும் பாரு : கனல் கண்ணனுக்கு எதிராக பிரபல தயாரிப்பாளர்!!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2022, 12:40 pm
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசினார்.
ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் கடவுளை வணங்குபவன் முட்டாள் என்ன ஒரு சிலை உள்ளது அந்த சிலை உடைக்கபட வேண்டும், எப்போது அந்த சிலை உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார். அவரின் இந்த பேச்சு கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. கனல் கண்ணனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகம் தந்தை பெரியார் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கனல் கண்ணன் மீது புகார் கொடுத்துள்ளது.
அந்த புகாரை பெற்றுக்கொண்ட சென்னை மாநகர போலீசார், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பைட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையில் கைதுக்கு பயந்து கனல் கண்ணன் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் பெரியார் குறித்து தன் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார் கனல், இது மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் பலரும் கனல்கண்ணனை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
கனல்கண்ணன் குறித்து கருத்து தெரிவித்த திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், கனல் கண்ணன் ஒரு மனநோயாளி என விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கனல்கண்ணன் பெரியார் சிலையை கனவில் தான் உடைக்க வேண்டும், சிலர் நடைமுறையில் இல்லாத சிந்தனையில் உள்ளனர், பெரியாரை தொடுவதற்கும், பேசுவதற்கு யாருக்காவது தைரியம் இருந்தால் தொட்டு பார்க்கட்டும், பேசி பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.
இந்த வரிசையில் கனல் கண்ணனுக்கு திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, பைட் மாஸ்டர் கனல் கண்ணன் டேய் நீ என்னடா யார்ரா நீ பெரியாரை அவமதிக்க அளவுக்கு பெரிய ஆளா? சினிமாவே ஒரு …….. வேலை, அதுல நீ வேலை செஞ்சுகிட்டு இருக்க, ஏமாற்றி புரொடியூசரை கவிழ்த்தோமா, புரொடியூசர் பொண்டாட்டி தாலியை அறுத்தோமா, பொண்டாட்டி புள்ளைகளை வாழவைத்தோமா என்று இருப்பதை விட்டு அதிகப்படியான பேச்சு உனக்கு எதற்கு.
ஏற்கனவே நீ ஒரு கோவில் கட்டி சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பாமர ஜனங்களை ஏமாற்றி வசூல் பண்ணிக்கிட்டு இருக்க, நீ இந்த மக்களுக்காக உழைத்த பெரியாரை விமர்சிப்பதற்கு யார் தைரியம் கொடுத்தது.
மரியாதையாக மன்னிப்பு கேள். பைட் மாஸ்டர் யூனியனில் இருந்து உன்னை அவர்கள் தூக்க வேண்டும், இல்லை என்றால் போராட்டம் நடக்கும். மெட்ராஸில் இனி நீ எங்குமே வேலை செய்ய முடியாது. மன்னிப்பு கேள்.. பெரியாரை பேசுகிற அளவிற்கு உனக்கு துணிச்சல் வந்து விட்டதா. உனக்கு கொடுக்கிற சுண்டல் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.