ஸ்ரீரங்கம் கோவில் அருகே பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பட்டப்பகலில் துணிகரம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2025, 11:53 am

திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் ரவுடி திலீப் தரப்பை சேர்ந்த அன்பு என்பவரை, மர்ம கும்பல் இன்று காலை சரமாரியாக வெட்டிக் கொன்றது.

சரித்திர குற்றவாளியான அன்பு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மேலூர் சாலைப் பகுதியில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வரும் வழியில் மர்ம கும்பல் அன்புவை துரத்தியது.

இதையும் படியுங்க: ‘முதல்வர்கிட்ட கேளுங்க..’ கடுப்பான திருமா.. கூட்டணியில் விரிசல்?

சுதாரித்துக் கொண்ட அன்பு அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் தப்பி ஓடினார், ஆனால் தொடர்ந்து விரட்டி வந்த மர்ம கும்பல் தெப்பக்குளம் பகுதியில் அவரை பிடித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

படுகொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த அன்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பஸ் பார்க்கிங் பகுதியில் நடைபெற்ற படுகொலையை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Sri rangam Rowdy Murder

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு அன்புவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்