பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது.. கொலை வழக்கில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2023, 7:54 pm

விருதுநகரைச் சேர்ந்த முருக லட்சுமி என்பவர் வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளியான தனது கணவர் செந்திலை காணவில்லை என விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் செய்திருந்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் செந்திலின் செல்போன் கடைசி அழைப்புகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

அவருடைய கடைசி அழைப்புகளை கண்டறிந்தனர். அதன்படி வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளியுடன் தொடர்பு கொண்டு வந்தது தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அருப்புக்கோட்டை ஏஎஸ்பி வருண்காரன் தலைமையில் ஆன போலீசார் மதுரையில் வைத்து வரிச்சூர் செல்வத்தை பிடித்து விசாரணை செய்தனர்

மேலும் சென்னையில் வைத்து வரிச்சூர் செல்வம் தனது கூட்டாளிகளை சேர்த்து செந்திலை கொலை செய்ததாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக தெரிய வருகிறது.

இதற்கிடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் செந்தில் அவருடன் இணைந்துள்ளார். அச்சமயத்தில் அவரை சென்னையில் வைத்து கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வரிச்சிர் செல்வம் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சாத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 684

    0

    0