12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல A+ ரவுடி கைது : சென்னையில் பதுங்கியிருந்த துப்பாக்கி கார்த்தி சிக்கினான்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 6:21 pm

கவுன்சிலர் தேர்தலின் போது வளசரவாக்கம் தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே சீட் பெறுவதில் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபல A+ சரித்திர பதிவேடு ரவுடியான கார்த்திகேயன் (எ) துப்பாக்கி கார்திக்கை பெரவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

4 கொலை வழக்கு , 5 கொலை முயற்சி வழக்கு ஆள் கடத்தல் என 26 வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பல குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த கவுன்சிலர் தேர்தலின் போது வளசரவாக்கம் தொகுதி 147 வார்டில் திமுக பிரமுகர்கள் மாதவன் மற்றும் சதீஷ் இடையே அவர்களது மனைவிகளுக்கு சீட் வாங்கி கொடுப்பதில் போட்டி இருந்த நிலையில் சதீஷ் வீட்டிற்கு சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

தேர்தலில் மாதவன் மனைவி ரமணி என்பவருக்கு சீட் வழங்கப்பட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சதீஷ் அளித்த புகாரில் போலீசார் தேடி வந்துள்ளனர்.

அதே போல வியபாரிகளை மிரட்டி பணம் மாமூல் வசூலித்து வந்தது தொடர்பாகவும் புகார்கள் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 755

    0

    0